புதுவை தேங்காய்திட்டு வசந்த நகரில் குடியிருப்புக்கு மத்தியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் தற்போது பாசி படர்ந்து, புல் தரை போல் காணப்படுகிறது. இதில் இருந்து கொசுகள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?