வடமதுரையை அடுத்த அய்யலூர் பேரூராட்சி 12-வது வார்டு மணியக்காரன்பட்டி பகுதியில் உள்ள மயானம் பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் மயானத்துக்கு செல்ல முறையான பாதை வசதியும் இல்லை. இதனால் மயானத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே மயானத்தை சீரமைத்து எரிவாயு தகனமேடை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.