தென்காசி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவில் கசிந்து தேங்குகின்றது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல இடையூறாக உள்ளது. சுகாதாரக்கேடாகவும் காட்சி அளிக்கிறது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை அகற்றி முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.