ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு மாமரத்துப்பாளையம் சக்தி தேவி நகரில் உள்ள பெயர் பலகையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பலகையில் உள்ள ‘சக்தி தேவி நகர்’ என்ற பெயர் சரியாக தெரிவதில்லை. எனவே புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து புதரை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.