கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கும் நபர்கள் பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகம் பக்கமாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். இவர்களால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கிறார்கள். மேலும் இரவு நேரத்தில் அந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த அச்சமாக உள்ளது. எனவே போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும்.
-ஷியாம், கிருஷ்ணகிரி.