புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. உணவு, உடை, மருத்துவ செலவுகளுக்கு இந்த பணத்தை தான் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் காலதாமதமாக கிடைப்பதால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் மாதத் தொடக்கத்தில் ஓய்வூதியம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.