தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-09 10:05 GMT

கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலைகளில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. குறிப்பாக குனியமுத்தூர், நரசிம்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்