கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அவை சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்களை கடிக்க விரட்டுகின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் துரத்துகின்றன. இதனால் வெளியே நடமாடவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.