தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-02 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ்நிறுத்தம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்று கடிக்கிறது. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்