புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் திருவரங்குளம் பெரிய ஊராட்சி ஒன்றியமாகவும், மக்கள் தொகையும் அதிகம் உள்ள ஊராட்சியாகவும் கருதப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி சாகுபடி மூலமாக அதிகளவில் நெல், சோளம், கடலை, உளுந்து, எள், கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு தானிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இவற்றை உலர வைக்க உலர்களம் இன்றி பல்வேறு ஊர்களுக்கும் தங்களது உணவு தாணியங்களை கொண்டு சென்று உலர வைக்கும் நிலை உள்ளது. இதனால் கொத்தமங்கலத்தில் போதுமான உலர்களங்கள் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.