புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி, ராஜாபகதூர், அண்ணாநகர், மீனம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கந்தர்வக்கோட்டையில் இருக்கும் அரசுப்பள்ளி, புதுப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தஞ்சாவூரில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கந்தர்வக்கோட்டை வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆலங்குடியிலிருந்து தொண்டைமான்ஊரணி வழியாக காலை 06.50 மணியளவில் நகரப்பேருந்து கந்தர்வக்கோட்டைக்கு செல்கிறது. அந்தப் பேருந்தில் செல்லும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி திறப்பதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.