தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-02 10:41 GMT

கோவை சிங்காநல்லூரில் விவேகானந்தா நகர், டெக்ஸ்டூல் லே அவுட் ஆகிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. வீதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் நாய்க்கடிக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்