நாகர்கோவில் டதி அம்மாள் தெருவில் இரவு நேரத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.