மேல்மலையனூர் அடுத்த கரடிக்குப்பம் கிராமத்தில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கிராம பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.