மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2025-10-26 13:38 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் சாலையில் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டுதல், பொது இடங்களில் அரைகுறை ஆடைகளுடன் படுத்து கிடப்பதினால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மதுப்பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்