பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராமத்தில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் வெளியூர் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பாடாலூரில் இருந்து பஸ் ஏறி திருச்சி கொளக்காநத்தம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன்கருதி பாடாலூரில் அரசு விரிவுபடுத்தப்பட்ட கலைக் கல்லூரி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.