தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சி மேலப்புதூரில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் கட்டப்பட்ட நீரேற்றும் மோட்டார் அறை பயன்பாடற்ற நிலையில் காட்சிப்பொருளாக உள்ளது. இதன் அருகில் உள்ள பழுதடைந்த கட்டிடத்திலேயே மோட்டார் அறை ஆபத்தான முறையில் செயல்படுகிறது. எனவே புதிய கட்டிடத்துக்கு மோட்டார் அறையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.