ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-10-26 11:42 GMT

கோவை மாநகராட்சி 85-வது வார்டுக்கு உட்பட்ட போத்தனூர் எம்.ஜி.ஆர். நகர் 2-வது வீதியில் கடந்த 4 மாதங்களாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் தெருநாய்கள், பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அந்த பகுதியில் தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்