பாதை வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-10-26 11:31 GMT

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ராக்கம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கணக்கான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லாமல் உள்ளதால், இறந்தவர்களின் உடலை சுமந்துகொண்டு வயலில் இறங்கி சுடுகாட்டுக்கு செல்லும் அவலநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்