பயணிகள் அவதி

Update: 2025-10-26 11:31 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் நிலையில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பஸ்கள் சென்றுவர முறையான சாலைகள் அமைக்கப்படாததால் மழை நேரங்களில் பஸ் நிலையம் குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் சேறும், சகதியுமாக உள்ளதால் பயணிகள் அவதியடைவதுடன், சிலர் வழுக்கியும் விழுகின்றனர். டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை மற்றும் இருக்கை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், நோயளிகள் உள்பட பயணிகள் அனைவரும் மழையில் நனைந்து கொண்டே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்