தஞ்சை ஞானம்நகர் 2-வது கிழக்கு தெருவில் குப்பை தொட்டி சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மழைக்காலங்களில் குப்பைகளில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.