பயணிகள் அவதி

Update: 2025-10-19 12:42 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளதால், பயணிகள் தங்கள் பகுதிக்கு செல்லும் பஸ்கள் வரும் வரை கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்