சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2025-10-19 11:18 GMT

திருச்சி மாவட்டம் அகிலாண்டேஸ்வரி நகர் குழுமணி சாலையில் லிங்கம் நகர் தொடங்கி மருதாண்டாக்குறிச்சி வரை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சில கால்நடைகள் இரவு நேரத்தில் சாலையில் படுத்துக் கொள்வதால் சாலை ஓரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அவற்றின் மீது மோதி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பகல் நேரத்தில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் இந்த பகுதியில் குழந்தைகள், பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்