கும்பகோணம் 47-வது வார்டு ஆமைக்காரம்பாளையம் தெருவில் பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் அடிக்கடி வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.