மதுரை நகர் வில்லாபுரத்தை அடுத்த தெற்குவாசல் செல்லும் பாலத்தில் இருபுறத்திலும் உள்ள பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்து முறிந்து கிடக்கின்றது. மேலும் சில இடத்தில் முழுவதுமாக கம்பிகள் இன்றி அபாயமாக காட்சி அளிக்கின்றது. குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாலத்தை ஆய்வு செய்து விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.