அய்யலூர் பேரூராட்சி 10-வது வார்டு குளத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றிலும் முட்செடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே முட்புதர்களை விரைந்து அகற்ற வேண்டும்.