ஆத்தூர் தாலுகா கோனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றிலும் கட்டிட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் பழைய பள்ளி கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு, அதன் கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பாம்பு, விஷப்பூச்சிகளின் வாழ்விடமாக அப்பகுதி இருக்கிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் சிரமப்படுகின்றனர். இதுதவிர பள்ளியில் கழிப்பறை புதிய கட்டிடம் கட்டி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.