கேப்பர் மலை- வண்டிப்பாளையம் சாலை வடுகப்பாளையத்தில் இரவு வேளையில் மாடுகள் சாலையில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகின்றனர். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.