வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் அரசு ஆரம்ப நிலையம், ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே அங்கு செல்ல போதிய பஸ் வசதி மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டரை நியமிக்கவும், போதிய மருந்துகளை இருப்பு வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.