விளம்பர பதாகைகள் அகற்றப்படுமா?

Update: 2025-10-12 13:08 GMT

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதுடன், பலத்த காற்று அடிக்கும்போது இந்த விளம்பர பதாகைகள் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்