சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாத்தனி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை மாதத்தில் சில நாட்கள் மட்டுமே இயங்குகிறது. இதனால் அப்பகுதியினர் அத்தியாவசிய பொருட்களை சரியாக வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடையை நாள்தோறும் திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?