பொதுமக்கள் அச்சம்

Update: 2025-10-12 11:13 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர். இதனால் அச்சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகள், சாலையை கடக்க காத்திருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்