கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் வழியில் கோழிப்பாலம் சுடுகாடு பகுதியில் சாலையோரத்தில் மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அங்கு எந்தவித தடுப்புகளும் இல்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலையோரத்தில் சென்றால் பள்ளத்தில் கவிழ்ந்து விடும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு ஆபத்தான அந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.