கும்பகோணம் மாநகராட்சி கருப்பாயிரம்பிள்ளையார் கோவில் அருகே வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. தூர்வாரப்படாததால் வாய்க்காலில் மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.