தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-12 07:06 GMT

திங்கள்சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் தெருக்களில் நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பலரை நாய்கள் கடிப்பதற்கு விரட்டுவதால் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்