சி.என்.பாளையம் அரசு ஆரம்ப பள்ளி எதிரே குப்பை அள்ளும் வாகனங்கள் நீண்ட நாட்களாக செயல்படாமல் நிற்கின்றன. இதனால் அந்த வாகனங்கள் துருப்பிடித்து வீணாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வாகனங்களை விரைந்து சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.