தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன்கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.