கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து சிந்தாமணிநகர், வசந்தம் நகர், பூரணம்மாள் காலனி, கடலையூர் ரோடு ஆகிய பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் கோவில்பட்டி புதுக்கிராமம் நுழைவுத்தடமான கோபாலபுரம் தெருவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.