புளியங்குடி பஸ் நிலைய வளாகத்தில் வாகன காப்பகம் இ்ல்லாததால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சிலர் பஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே வாகன காப்பகம் தொடங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.