உடுமலை ராமசாமிநகர் செல்லும் சாலை வழியாக கிராமங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள ரெயில்வே கிராசிங்கில், மேம்பாலம் இல்லாததால் கேட் மூடப்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ராமசாமிநகர பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.