சுகாதார சீர்கேடு

Update: 2025-10-05 10:34 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி 3-வது நுழைவு வாயில் முன்பு பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்