திக்கணங்கோடு பகுதியில் ரேஷன்கடை செல்பட்டு வருகிறது. சமீபத்தில் ரேஷன்கடைகளில் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கிய பிறகு அடுத்த நபருக்கு பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதுடன், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி இந்த முறையை அகற்றுவதுடன், பொருட்கள் பயனாளிகளுக்கு சரியாக கிடைக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், கொல்லாய்.