தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-05 09:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகேட்டை அருகே உள்ள நடுபட்டி, கீழபட்டி, மேலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்துவிடுகின்றன. மேலும் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்