தெருநாய் தொல்லை

Update: 2025-10-05 06:39 GMT

சென்னை நியூ பாரன்ஸ் சாலை, தாசாமக்கான் பகுதியின் சாலையில் தெருநாய்கள் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது. சாலையில் வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி கடிக்க வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகள் நாய்கடியால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இரவுநேரங்களில் நாய்கள் திடீரென வாகனங்களில் வந்து விழுவதால் பயத்தோடே வாகனம் ஓட்டும்நிலை இருக்கிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூராக உள்ள இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்