வானமாதேவி ஊராட்சி திருமாணிக்குழி- கட்டாரச்சாவடி செல்லும் சுமார் ஒரு கி.மீ. தூரசாலையானது பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இது தொடர்பான செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் புகைப்படத்துடன் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு புதிதாக தார்ச்சாலை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.