கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள ஆண்கள் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பெரும் அவதி அடைகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.