நாய்கள் தொல்லை

Update: 2025-09-28 18:09 GMT
சேத்தியாத்தோப்பு பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகள் நிகழும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்