குமராட்சி அருகே முள்ளங்குடி கிராமத்தில் உள்ள முள்ளங்குடிபாசன வாய்க்கால் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும் முக்கிய வாய்க்கால்களில் ஒன்றாகும். ஆனால் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.