புதுச்சேரி நகர பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காலியாக கிடக்கும் மனைகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்களாக காட்சி அளிக்கின்றன. இங்கிருந்து விஷ பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்கு படையெடுக்கின்றன. விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் காலி மனைகளை சுத்தம் செய்து பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?