பொதுமக்கள் அச்சம்

Update: 2025-09-28 12:19 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த தெருநாய்களுக்கு இரவு நேரத்தில் சிலர் உணவு வைத்துவிட்டு செல்கின்றனர். ஏற்கனவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற செயலால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அத்துடன் அங்கு நடைபயிற்சி வந்து செல்லும் பொதுமக்களையும் தெருநாய்கள் துரத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவதோடு உணவு வைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்